தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'அமரன்' வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிக்கு சென்றார். மூலவரான முருகப் பெருமான், சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது “முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் முடிவு செய்தேன். அதனால்தான் முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறேன்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் “இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்க வேண்டும். அதற்கு பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். இதுபோல் இனி நடக்காது என வேண்டுவோம். அதைத் தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
பின்னர் மதுரை சென்ற சிவகார்த்திகேயன், திருப்பரங்குன்றத்திலும் தொடர்ந்து பழநி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.