கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

தெலுங்கில் பாலகிருஷ்ணா, பாபி தியோல், ஊர்வசி ரவுட்டாலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்கு மகாராஜ்'. இந்த படம் ஜனவரி 12ம் தேதியான நேற்று தெலுங்கில் வெளியாகி உள்ளது. பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் திட்டமிட்டபடி தமிழ், ஹிந்தியில் நேற்று வெளியாகவில்லை.
இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'டாக்கு மகாராஜ் படத்தின் தமிழ், ஹிந்தி பதிப்புகளின் டெக்னிக்கல் பணிகள் தாமதமாகி வந்ததால் ஜனவரி 12ம் தேதி வெளியாகவில்லை. என்றாலும் தற்போது பணிகள் முடிவடைந்து தணிக்கை குழுவின் சான்றிதழும் பெற்று விட்டோம். அதனால் ஜனவரி 17ம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தியில் வெளியாக உள்ளது' என்று தெரிவித்திருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்த டாக்கு மகாராஜ் படத்தை பாபி கொல்லி என்பவர் இயக்கியுள்ளார்.