தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரின் மகள். சுரேஷ் குமார் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகம் நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது சம்பள உயர்வால் தள்ளாடி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருபவர். வரும் மே மாதம் முதல் மலையாள திரை உலகில் புதிய படங்களை தயாரிக்கப் போவதில்லை என்று சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு செய்தார்.
அது மட்டுமல்ல நடிகர்கள் அதிக ஊதியம் கேட்பதாலும் தங்களது படங்களை தாங்களே 100 கோடி வசூல் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதாலும் தயாரிப்பாளர்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, நடிகர்களே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படம் தயாரிப்பது ஆபத்தான போக்கு என்றும் கூறியிருந்தார். பொதுவாகவே அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளை இழுத்து சர்ச்சைகளில் சிக்கும் ஜெயிலர் பட வில்லனான விநாயகன் சுரேஷ்குமாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா என்பது உங்களுடைய குடும்ப சொத்தா என்ன? நீங்கள் இதை உங்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லி படங்களில் நடிக்க வேண்டாம் என சொல்லுங்கள். நான் ஒரு நடிகன்.. நான் விரும்பினால் என்னால் படம் தயாரிக்க, இயக்க, விநியோகம் செய்ய, படங்களை திரையிடவும் முடியும். இது இந்தியா. ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்.