கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
நியூயார்க்கின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், வருடம் தோறும் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் பொழுதுபோக்கு, கல்வி, வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, இசை, விவசாயம் என பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் பிரபலமானவர்களின் பெயர்கள் இந்த 30 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறும்.
அந்த வகையில் 2025ம் வருடத்திற்கான 30 வயதுக்கு கீழான 30 பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. இதில் பொழுதுபோக்கு என்கிற பிரிவில் நடிகைகளில் அபர்ணா பாலமுரளி மட்டுமே இந்த வருட பிரபலமாக இடம் பிடித்துள்ளார். இவர் தவிர பாலிவுட் நடிகர் ரோகித் சரப் என்பவரும் இதே பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்த பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் அபர்ணா பாலமுரளி கடந்த வருடம் தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'ராயன்', மலையாளத்தில் நடித்த 'கிஷ்கிந்தா காண்டம்' மற்றும் 'ருத்ரம்' ஆகிய படங்களில் தனது நடிப்பில் அழுத்தமான முத்திரை பதித்திருந்தார். கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான 'மகேஷ்ஷிண்டே பிரதிகாரம்' என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழில் 'எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2020ல் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.