சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'விடாமுயற்சி' படத்திற்கு அடுத்து நடிகர் அஜித் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் ஏப்.10ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் டீசர் இன்று(பிப்., 28) மாலை 7:03 மணியளவில் வெளியானது.
ஒரு நிமிடம் 34 நொடிகள் கொண்ட இந்த டீசரில் அஜித்தின் மாஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இளமையான லுக், சால்ட் அண்ட் பெப்பர் லுக் என அஜித் ஸ்டைலாக உள்ளார். அதோடு கார் ஸ்டன்ட், மாஸ் ஆக் ஷன் காட்சிகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
‛‛ஏகே ஒரு ரெட் டிராகன்... அவன் போட்ட ரூல்ஸ அவனே பிரேக் பண்ணிட்டு வந்து இருக்கானா அவன் மூச்சுலேயே முடிச்சுடுவான்..., நாம எவ்வளவு தான் ‛குட்'-ஆ இருந்தாலும் இந்த உலகம் நம்மள ‛பேட்'-ஆக்குது..., வாழ்க்கைல என்னெல்லாம் பண்ணக்கூடாதோ சில சமயம் அதெல்லாம் பண்ணனும் பேபி...'' போன்ற பஞ்ச் டயலாக்குகளும் இடம் பெற்றுள்ளன. டீசரை பார்க்கையில் இது ஒரு கேங்ஸ்டர் கதை என புரிகிறது.
விடாமுயற்சி படத்தின் தோல்விக்கு பின் அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முன்னோட்டமாக டீசர் அமைந்துள்ளது. படமும் சிறப்பாக அமைந்தால் நிச்சயம் வசூல் சாதனை புரியலாம்.
டீசர் லிங்க்.... : https://www.youtube.com/watch?v=jl-sgSDwJHs