தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தனுஷ் இயக்கி, நடிக்கும் 'இட்லி கடை', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', சிலம்பரசனின் 'எஸ்.டி.ஆர்.49' படங்களை தயாரித்து வருகிறவர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன். அவர் இயக்கி உள்ள முதல் படம் 'இதயம் முரளி'. இதில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் என நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆகாஷ் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: 1995ல் இருந்து 2025 வரை பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. தற்போதைய காலகட்ட கதைக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. இதற்கான படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல இருக்கிறோம். இது வெறும் காதல் படம் இல்லை. நட்பு இருக்கிறது, சென்ட்டிமென்ட் இருக்கிறது. கதை கிராமத்தில் ஆரம்பித்து அமெரிக்கா வரை செல்கிறது.
கயாடு லோஹர் , ப்ரீத்தி முகுந்தன், நிகாரிகா, ஏஞ்சலின் ஆகிய நான்கு பேருமே இந்த படத்தில்தான் அறிமுகமானார்கள். இப்போது இவர்கள் அனைவருமே பிசியான நடிகைகள் ஆகிவிட்டார்கள். இது எனக்கு மகிழ்ச்சியா இருக்கிறது. கயாடு லோஹர் 'டிராகன்' படத்தின் மூலம் உயரத்திற்கு சென்று விட்டார். ப்ரீத்தி பல படங்களில் நடிக்கிறார். நிகாரிகா இன்ப்ளூயன்சர். நடிக்கக் கேட்டபோது, 'விருப்பமில்லை' என்று சொன்னார். கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார், தெலுங்கிலும் நடிக்கிறார். என்றார்.