துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்-களை விளம்பரப்படுத்தியன் காரணமாக தெலுங்கு நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபட்டி, விஜய் தேவரகொன்டா, நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி மற்றும் சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் 19 பேர் மீது தெலங்கானா காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மியாபுர் என்ற இடத்தைச் சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள், சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்களை இணையதளங்கள் மற்ற தளங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுவதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.