துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காமெடி நடிகராக அசத்தி வந்த நடிகர் சூரி, ‛விடுதலை' படத்தின் மூலம் நாயகன் ஆனார். தொடர்ந்து நாயகனாக பயணிக்கும் அவர் விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களிலும் தனது முத்திரையை பதித்தார். தற்போது ‛மாமன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகும் நிலையில் அடுத்து ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு 'மண்டாடி' என பெயரிட்டுள்ளனர்.
விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிக்க, ‛செல்பி' படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் கடல் சார்ந்த கதையில் இருக்கலாம் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே தெரிகிறது. நாளை(ஏப்., 19) படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகிறது.
இப்படம் பற்றி சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛ எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா ரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.