தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமா தனக்கான வெற்றிடத்தை தானே நிரப்பிக் கொள்ளும் என்பார்கள். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பிறகு அவரது இடத்தை கன்னட நடிகர் ஹொன்னப்ப பாகவதர் பிடித்தார். அவர் நடிக்க இருந்த படங்களில் எல்லாம் நடித்தார்.
அதே போல என்.எஸ்.கிருஷ்ணன் அதே வழக்கில் சிறை சென்றபோது அவரது இடத்தை நிரப்பியவர் டி.எஸ்.துரைராஜ். என்.எஸ்.கிருஷ்ணன் அப்போது காமெடியில் தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தால் துரைராஜால் தனியாக வெற்றி பெறமுடியவில்லை. இதனால் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அவர்களுக்கு சகோதரர், மைத்துனர், வேலைக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் போன்ற கேரக்டர்களில் நடித்தார். ஆனால் என்.எஸ்.கேவின் ஆதிக்கத்துக்கு முன்னால் அவரால் வெளிவர முடியவில்லை.
இந்த நிலையில் என்.எஸ்.கிருஷ்ணன் சிறைக்கு சென்றதால் அவர் நடிக்க இருந்த படங்களில் துரைராஜ் நடித்தார். சில படங்களில் டி.ஏ.மதுரம் ஜோடியாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் 'அண்ணி உங்களை என் அம்மாவாக பார்க்கிறேன். என்.எஸ்.கே இடத்தில் இருந்து என்னால் உங்களுடன் நடிக்க முடியவில்லை' என்று துரைராஜ் கூற அவரது உணர்வை மதித்து நடிப்பதை நிறுத்தினார் மதுரம்.
ஓரளவிற்கு என்.எஸ்.கே இடத்தை நிரப்பினார் துரைராஜ். ‛பிழைக்கும் வழி, போர்ட்டர் கந்தன்' உள்ளிட்ட சில காமெடி படங்களையும் இயக்கினார். 'பிழைக்கும் வழி' பெரிய வெற்றி பெற்று அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. ஆனால் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் துரைராஜ் குதிரை ரேஸில் இழந்தது தனி கதை.