சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோர் பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி கையால் பெற்றனர்.
நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.
இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கும், தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் டில்லியில் முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் நடிகர்கள் அஜித், பாலகிருஷ்ணா, சேகர் கபூர் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.
அஜித் குமார்
அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித் குமார்(53) இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். சினிமா தவிர்த்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார்.
பாலகிருஷ்ணா
மறைந்த தெலுங்கு நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணா(64) தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார்.
சேகர் கபூர்
ஹிந்தி சினிமாவின் இயக்குனரும், நடிகருமான சேகர் கபூர்(79) தமிழில் கமலின் விஸ்வரூபம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.