ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வெளியான 'அறம், ஐரா, ஹீரோ, டாக்டர், அயலான்' என பல படங்களை தயாரித்தவர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ். இவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த வீடியோ ஒன்று நேற்று வெளியான நிலையில், இன்று அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு 'அங்கீகாரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இந்த படத்தை ஜே.பி.தென்பதியான் என்பவர் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் தயாரிப்பாளர் ராஜேஷுடன் மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.