மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் | விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு | 2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' |

பி.வாசு இயக்கிய 'சிவலிங்கா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பிரியா. அதன்பிறகு பூம் பூம் காளை, யுக சதம், டைனோசர்ஸ், பாம்பாட்டம் படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் அவர் புதிய படம் ஒன்றில் மாடலிங் துறையில் முன்னணியில் உள்ள தமிழ்வாணன் தயாரித்து, நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை 'போங்கு' படத்தை இயக்கிய தாஜ் இயக்குகிறார். எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். விஜய் எஸ். குமரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தாஜ் கூறும்போது "உலகில் பணத்தை விட அதிகாரம் தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பது தான் இந்தக்கதையின் மையம். அந்த இளைஞனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பது தான் இப்படத்தின் கதை" என்றார்.