சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', ஹிந்தியில் 'கபீர் சிங், அனிமல்' படங்கள் மூலம் பிரபலமானவர் தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக 'அனிமல்' பட நடிகை டிரிப்டி டிம்ரி நடிக்க உள்ளார்.
இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. அவர் நடிக்க சம்மதித்து பின் படத்திலிருந்து விலகியதாகவும் சர்ச்சை எழுந்தது. அவருக்குப் பதிலாகத்தான் டிரிப்டி டிம்ரி நாயகியாக அறிவிக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
இதனிடையே, படத்தின் இயக்குனர் சந்தீப் நேற்று இரவு எக்ஸ் தளத்தில், “ஒரு நடிகைக்கு ஒரு கதையைச் சொல்லும் போது, நான் 100 சதவீத நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் (வெளிப்படுத்தாத ஒப்பந்தம்) உள்ளது. ஆனால், இதைச் செய்வதன் மூலம், நீங்கள் யார் என்பதை 'வெளிப்படுத்தி உள்ளீர்கள்'. ஒரு இளைய நடிகையை நிராகரித்து என் கதையை வெளியே சொல்வது, இதுதான் உங்கள் பெண்ணியத்தின் குறிக்கோளா ?. ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, என் கலைக்குப் பின்னால், நான் பல வருட கடின உழைப்பைக் கொடுத்துள்ளேன். எனக்கு, திரைப்படத் தயாரிப்புதான் எல்லாமே. உங்களுக்கு அது கிடைக்கவில்லை, உங்களுக்கு அது கிடைக்காது, ஒரு போதும் கிடைக்காது.
இதைச் செய்… அடுத்த முறை முழு கதையையும் சொல்லு… ஏனென்றால் அது எனக்கு ஒரு சிறிய வித்தியாசத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. 'டர்ட்டி பி.ஆர் கேம்ஸ்'. இந்த பழமொழி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 'பூனை தூணில் உள்ள ஓட்டையைக் கீறிவிடுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
அவர் தீபிகா படுகோனே பற்றித்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். பாலிவுட்டில் 'பி.ஆர் டீம்' என முன்னணி சினிமா பிரபலங்களுக்கு ஒரு குழு இருக்கும். தங்களுக்குப் பிடிக்காதவர்களை இப்படி 'பி.ஆர். டீம்' வைத்து செய்திகளைப் பரப்பிவிட்டு அவர்களை இம்சை செய்வதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள் என அதனால் பாதிக்கப்பட்ட சிலர் சொல்லி இருக்கிறார்கள்.
பாலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் சந்தீப் ரெட்டி வங்காவின் எக்ஸ் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபிகா ஏதாவது சொல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.