தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒரு காலத்தில் பார்த்திபன், வடிவேலு கூட்டணியின் காமெடி தெறிக்க விட்டது. 'பாரதி கண்ணம்மா, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க, வெற்றிகொடிகட்டு, காக்கை சிறகினிலே' உள்பட பல படங்கள் இவர்களின் காமெடியால் புகழ்பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பார்த்திபனும், வடிவேலுவை நேற்று சந்தித்து பேசினார். அவர் சொன்ன கதை வடிவேலுக்கு பிடித்திருக்கிறது. இருவருக்கும் சமமான வாய்ப்பு கொண்ட கதையாக இது உருவாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பார்த்திபன், 'நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர் வடிவேலு. சந்தித்தோம் இன்று. விரைவில் படம் வெளியாகும்' என்று குறிப்பிட்டு உள்ளார்.