தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் நாயகனாகவும், தெலுங்கில் நாயகன், வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் ஆதி. தமிழில் கடைசியாக 'சப்தம்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த விதத்தில் ஓடவில்லை.
இந்நிலையில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'அகண்டா 2' படத்தின் டீசரில் சில வினாடிகளே இடம் பெற்ற ஆதியின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்தில் அவர் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. அவரைப் பார்த்து வீர வசனம் பேசி, தன்னைத் தாக்க வந்தவர்களை சூலாயுதத்தை சுற்ற வைத்து துவம்சம் செய்யும் பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆக்ஷன் அவரது ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த டீசர் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 24 மணி நேர முடிவில் புதிய சாதனையைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யு டியூப் டிரென்டிங்கிலும் இந்த டீசர் தான் முதலிடத்தில் உள்ளது. எவ்வளவோ 'டிரோல்கள்' வந்தாலும் பாலகிருஷ்ணா படம் கடந்த சில வருடங்களாக வசூலில் குறை வைக்காமல் லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது.