கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
'ஒரு கைதியின் டயரி' என்கிற பரபர ஆக்ஷன் படத்திற்கு பிறகு அழகான காதல் கதை ஒன்றை படமாக்க விரும்பினார் பாரதிராஜா. இதற்காக அவர் 'பச்சைக்கொடி' என்ற தலைப்பு வைத்து ஒரு கதையும் தயாராக வைத்திருந்தார். அப்போது அவர் கையில் 'முதல் மரியாதை' ஸ்கிரிப்டும் ரெடியாக இருந்தது. ஆனால் சிவாஜி கால்ஷீட் கிடைக்காததால் 'பச்சைக்கொடி'யை ஆரம்பித்தார்.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தினார். நடிகராக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். நாயகியாக அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனியை தேர்வு செய்திருந்தார்.
படத்தின் பூஜையும் பிரமாண்டமாக நடந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தார். படத்திற்காக 'பூஜைகேத்த பூவிது' பாடலையும் ரஞ்சனியை வைத்து படமாக்கினார்.
இதற்கிடையில் முதல் மரியாதை படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக் கொண்டதும் 'பச்சைக்கொடி'யை அப்படியே விட்டு விட்டு அந்த படத்தை இயக்க தொடங்கி விட்டார். பச்சைக்கொடிக்காக தேர்வான ரஞ்சனியை 'முதல் மரியாதை' படத்தில் நடிக்க வைத்தார். 'பூஜைக்கேத்த பூவிது' பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் 'பச்சைக்கொடி' கதையை பாரதிராஜாவின் மைத்துனர் மனோஜ்குமார் இயக்கினார். பாண்டியராஜன், நிரோஷா, ஜனகராஜ், நடித்தனர்.