தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நடிகை சமந்தா தற்போது பெரும்பாலும் மும்பையில் தான் வசித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைவு தான். சமீபத்தில் தான் அவரது தயாரிப்பில் உருவான சுபம் என்கிற படம் வெளியானது. இன்னொரு பக்கம் அவருக்கும் பேமிலிமேன் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நிடிமொருவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையில் இருக்கும் சமந்தா ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றிருந்தார்.
இதுபோன்ற சமயங்களில் அங்கே ஜிம்மிற்கு வரும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர்கள் காத்திருப்பர். சமந்தா எப்போதுமே இது போன்ற புகைப்பட கலைஞர்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்து விட்டு செல்வார். அப்படித்தான் இந்த முறையும் ஜிம்மிலிருந்து வெளியே வந்த போது அவருக்கு ஒரு போன் வந்தது. அந்த போனை அட்டென்ட் செய்து பேசியபடியே வந்தார்.
தனது கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை கவனிக்காமல் போனில் பேசியபடி வந்தார். அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முற்பட்டனர். பின்னர் மீண்டும் ஜிம்முக்குள் நுழைந்து வேறு இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட தனது காரில் ஏறினார். அப்போதும் போட்டோகிராபர்கள் விடாமல் அவரை போட்டோ எடுக்க முயற்சித்த கடுப்பான சமந்தா, போதும் நிறுத்துங்கள் என வேகமாக காரில் ஏறி பறந்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.