சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சவுபின் ஷபீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கூலி'. ஆகஸ்ட் 14ம் தேதியன்று வெளியாக உள்ள இப்படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கிடைத்த தகவலின்படி தமிழ் சினிமாவில் இதுவரையில் நடக்காத அளவிற்கு இந்தப் படத்திற்கான வியாபாரம் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்தமாக சுமார் 500 கோடி வரை வியாபரம் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் வியாபாரம் என்றாலே அதில் அதிகபட்ச வியாபாரம் என்பதை ஆரம்பித்து உயர்த்தியவர் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறையாக இணைந்த அறிவிப்பு வந்தபோதே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.
கமல்ஹாசனுடன் இணைந்து 'விக்ரம்' படத்தைத் தந்த போது கமலுக்கு அதிகமான வசூல் படமாக அந்தப் படம் அமைந்தது. அது போல ரஜினி படங்களுக்கான அதிகமான வசூலை இந்தப் படத்தில் லோகேஷ் அமைத்துத் தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.