சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பேய் படமான 'தி ராஜா சாப்' டிசம்பர் 5ல் வெளியாக உள்ளது. பொதுவாக பேய் படங்களுக்கு பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்படுவது வழக்கம். அப்போதுதான் பேய் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளும் நன்றாக வரும். ராஜாவாக இருந்த ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-ன் பேய் பங்களாவில் ஹீரோ பிரபாஸ் என்ன செய்கிறார்? பேய் பதிலுக்கு என்ன செய்கிறது? என்ற ரீதியில் கதை நகர்கிறது.
இதற்காக ஐதராபாத்தில் மிகப்பெரிய பங்களா செட் போடப்பட்டுள்ளது. இந்த செட் 42 ஆயிரம் சதுர அடியில் அரண்மனை மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாஸ், ஹீரோயின்கள், பேய் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலேயே இதுதான் பெரிய செட்டாம். இதை காக்க காக்க, சிறுத்தை, பையா உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக இருந்த ராஜீவன் உருவாக்கி இருக்கிறார். இந்த செட்டை ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இணைந்து 4 மாதங்களில் முடித்து இருக்கிறார்கள்.
வடக்குப்பட்டி ராமசாமி என்ற தமிழ் படத்தை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக்பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்திகுமார் நாயகிகளாக நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இது பிரபாஸ் நடிக்கும் முதல் திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.