பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
நடிகர் சிவாஜி தான் சம்பாதித்த பணத்தில் பார்த்து பார்த்து கட்டிய வீடு அன்னை இல்லம். அந்த வீட்டில் சிவாஜியின் வாரிசுகள் இப்போதும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். ஆனால் அந்த அன்னை இல்லத்துக்கே சோதனை வந்தபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த், தனது மனைவி அபிராமியுடன் சேர்ந்து ஈசன் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் சார்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஆனால் உரிய நேரத்தில் கடன்தொகை திருப்பி செலுத்தப்படாததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை கொடுக்காததால், அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வீடு தன் பெயரில் உள்ளது என்று பிரபு மனு தாக்கல் செய்ததால், ஜப்தி உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் முறையீட்டு மனு, தாக்கல் செய்தது.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது, இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி, வழக்கை திரும்ப பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். கடன் கொடுத்த நிறுவனத்திற்கு அசல் தொகை செலுத்தப்பட்டு விட்டதாகவும், வட்டியை தவணை முறையில் செலுத்த ஒத்துக் கொண்டுவிட்டதாகவும் அதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.