தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத கதாநாயகிகளில் ஒருவர் சரோஜா தேவி. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தவர். வயது மூப்பு காரணமாக நேற்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவு குறித்து ரசிகர்கள் பலர் அவர்களது சமூக வலைத்தளங்களில் இரங்கலையும், அவர்கள் ரசித்த சரோஜா தேவி நடித்த படங்கள் பற்றியும் எழுதியிருந்தனர்.
ஆனால், தமிழ் சினிமா உலகில் வழக்கம் போல சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். வழக்கம் போல பலர் எந்தவிதமான இரங்கலையும் தெரிவிக்கவில்லை. திரையுலகில் தங்களது சக மூத்த நடிகை ஒருவர் இறந்தது குறித்து அவர்கள் எதுவுமே இரங்கல் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பலரும் ஒரு வரி இரங்கல் கூட அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இத்தனைக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தில் சரோஜாதேவியுடன் நடித்திருக்கிறார் விஜய்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் பிரபு, சத்யராஜ், டி ராஜேந்தர், சிவக்குமார், சரத்குமார், குஷ்பு, சிம்ரன், கவுதமி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தனர். நேற்று தன்னுடைய பிறந்தநாளாக இருந்தாலும் அதற்கான கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டு, இரங்கலும் பதிவிட்டிருந்தார் சரத்குமார்.
இது போன்று முக்கியமான நடிகர்கள், நடிகைகள் மறைவுக்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு சினிமா ரசிகருக்கு இருக்கும் துயரம் அவர்கள் துறை சார்ந்தவர்களுக்கு வராதது ஆச்சரியம்தான்.