வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 29வது படத்தில் நடித்து வருகிறார். காடுகளை மையப்படுத்திய வீரதீர சாகச கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. கிடைக்கும் இடைவெளிகளில் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பி விடுகிறார்.
அந்த வகையில் தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இந்த பயணத்தை என்ஜாய் செய்வதை கூட்டத்தில் ஒருவனாக பின்னால் நின்று புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு.