தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நேற்று காலை நடந்தது. சென்னை அண்ணாநகரில் உள்ள விஷால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பிளாட்டில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்தது. அங்கே ஏன் என்று விசாரித்தால் அந்த பிளாட்டை விஷால் புதிதாக வாங்கியிருக்கிறார். அங்கேயும் வசிக்கப்போகிறார், அதனால் சென்டிமென்ட்டாக நிச்சயதார்த்தம் நடந்தது என்கிறார்கள்.
இந்த நிகழ்வில் சினிமாகாரர்கள் கலந்துகொள்ளவில்லை. இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நவம்பர் மாதம் அல்லது நடிகர் சங்க புது கட்டடம் திறக்கப்பட்ட அடுத்த முகூர்த்தத்தில் நடிகர் சங்க கட்டடத்தில் விஷால் தன்சிகா திருமணம் நடக்க உள்ளது.
விஷால் வீட்டில் இது 4வது காதல் திருமணம். அவர் அப்பா ஜி.கே.ரெட்டி, அம்மா ஜானகி தேவி இருவருமே அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்தவர்கள். விஷால் அப்பா அரசுப் பணியில் இருந்தவர், பின்னர் கிரனைட் பிஸினஸ், சினிமா தயாரிப்பாளர் என மாறியவர்.
சினிமா தயாரிப்பாளர், நடிகராக இருந்த விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, நடிகை ஷ்ரியா ரெட்டியை காதல் திருமணம் செய்தார். விஷால் தங்கை ஐஸ்வர்யா, கிரிஷ் திருமணமும் காதல் திருமணம்தான். அந்தவகையில் அவர் வீட்டில் இது 4வது காதல்.
இப்போது ரவி அரசு இயக்கத்தில் மகுடம் படத்தில் நடித்து வரும் விஷால், அதற்கடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். யோகிடா என்ற படத்தில் அதிரடி போலீசாக நடித்து இருக்கிறார் தன்ஷிகா. அந்த படம் விரைவில் வரப்போகிறது.