தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஷால் வெங்கட் இயக்கும் ‛பாம்' என்ற படத்தில் பிணமாக நடித்து இருக்கிறார் காளி வெங்கட். இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோ என்றாலும், பிணமாக இருக்கும் காளி வெங்கட்டை சுற்றியே கதை நகர்கிறதாம். படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் குறித்து பேசியுள்ள காளி வெங்கட், ‛‛எவ்வளவு கோடி பணம் இருந்தாலும், யாரும் பிணமாக இருக்க சம்மதிக்க மாட்டார்கள். அப்படி போட்டோ, வீடியோ எடுக்க மாட்டார்கள். அதெல்லாம் ஒரு கலைஞனுக்குதான் கிடைக்கும் பாக்கியம். பாம் படத்தில் பல நாட்கள் பிணமாக நடித்தேன். என்னை சுற்றி மற்றவர்கள் அழுவதை, என்ன நடக்கிறது என்பதை அந்த கோலத்தில் பார்த்தேன்.
ஒரு சில காட்சிகளில் பிணமான என்னை துாக்கி சுமப்பார் ஹீரோ அர்ஜூன் தாஸ். நாம் வெயிட்டாக இ ருக்கிறோம். ஹீரோ கஷ்டப்படுகிறாரே என்று பீல் பண்ணினேன். ஒரு காட்சியில் ஹீரோயின் ஷிவாத்மிகா ராஜசேகர்(இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் மகள்) என்னை துாக்கி சுமக்க வேண்டும். சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த காட்சியை எடுக்கலாமா என்று யோசித்தபோது, இப்படிதானே துாக்க வேண்டும் என்று என்னை அசால்ட்டாக துாக்கிக் கொண்டு நடித்தார். நான் மிரண்டுவிட்டேன்'' என்றார்.
பாம் என்று தலைப்பு வைத்தாலும் இது தீவிரவாத, போலீஸ் கதை இல்லை. வயிறு பிரச்னையால் ஒருவர் போடுகிற 'பாம்' சம்பந்தப்பட்ட, அதாவது, பிணம் பாம் போடுகிற வித்தியாசமான கதை.