பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் திரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரபு, பிரகாஷ் வாரியர், சிம்ரன் என பலர் நடித்திருந்தார்கள். சூப்பர் ஹிட்டான இந்த படத்தை அடுத்து மீண்டும் அஜித் நடிக்கும் 64-வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார். இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இந்த அஜித் 64 வது படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக தகவல் வெளியாகின.
ஆனால் தற்போதைய நிலவரப்படி அஜித் குமார், கார் ரேசில் பிசியாக இருப்பதால் இந்த படத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே தற்போது அஜித் 64வது படத்திலிருந்து ரோமியோ பிக்சர்ஸ் விலகிவிட்டதாகவும், அதனால் அஜித் படத்தை தயாரிப்பதற்கு வேறு ஒரு நிறுவனத்துடன் ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.