விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. |

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டாலா இயக்கத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் 'தேவரா திரைப்படம் வெளியானது. ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் உருவானபோது இது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியிட்டு அதன்படி முதல் பாகமும் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட 500 கோடி வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்கிற கேள்வியும் கூட, கடந்த ஒரு வருடத்தில் ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி, ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்க இருப்பது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.