தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
'ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றது. இடையில் விஷால் மற்றும் படக்குழுவுக்கும், ரவி அரசுக்கும் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் எஞ்சிய படப்பிடிப்பை விஷால் இயக்கியதாக செய்தி வெளியானது. இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
தற்போது விஷால் இயக்குவதாக அவரே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த தீபாவளி திருநாளில் ஒரு முக்கியமான முடிவை இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். 'மகுடம்' படம் எனது திரையுலக பயணத்தில் நான் இயக்குனராக எடுக்கும் முதல் முயற்சி. இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இப்படியான முடிவை எடுக்க வைக்கின்றன. இது கட்டாய முடிவு அல்ல, பொறுப்புணர்வின் அடிப்படையல் எடுக்கப்பட்ட முடிவு. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு விஷால் வெளியிட்ட மகுடம் போஸ்டரில் திரைக்கதை, இயக்கம் என விஷால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கதை என ரவி அரசு பெயர் இடம்பெற்றுள்ளது.