திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

கடந்த 2009ல் நடிகர் ரவி மோகன் தனது நீண்டநாள் தோழியான ஆர்த்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். 15 வருட குடும்ப வாழ்க்கைக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து பிரிந்து வாழ்கின்றனர். இந்த விவாகரத்து நிலுவையில் இருக்கும் நாட்களில் தனக்கும் குழந்தைகளுக்கும் மாதந்தோறும் 40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அதேசமயம் ஆர்த்திக்கு மாதந்தோறும் மூன்று லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல தனது குழந்தைகளை சந்திக்க விட ஆர்த்தி மறுக்கிறார் என்றும் அவர்கள் விபத்தில் சிக்கிய தகவல் கூட தனக்கு தாமதமாகத் தான் தெரிய வந்தது என்றும், தன் குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்கும்படி ரவி மோகன் வைத்த கோரிக்கையையும் ஏற்று, தன் குழந்தைகளை பார்ப்பதற்கு ரவிமோகன் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.