தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மூடப்பட்ட தியேட்டர்களில் உட்காருவதற்கு மக்கள் அச்சமடைந்த காரணத்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராத காரணத்தாலும் தியேட்டர்கள் பக்கம் அதிகமான மக்கள் செல்லவில்லை.
தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட நிலையில் திரையுலகினர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை வெளியிடும் கோரிக்கையை அதன் தயாரிப்பாளரிடம் முன்வைத்தனர்.
அவரும் பொங்கல் வெளியீடு என படத்தை அறிவித்தார். அடுத்த சில தினங்களில் மாநில அரசும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் மூடப்பட்ட ஏ.சி அரங்கினுள் மக்கள் மூன்று மணி நேரம் அமர்ந்து ஒரு படத்தைப் பார்ப்பது ஆபத்தானது என்ற கருத்தைப் பரப்பினர்.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கை அனுமதி என்பது மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் மாநில அரசு அனுமதி வழங்கும் என்ற தகவல் பரவி வருகிறது.
இதனால், பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட 'மாஸ்டர்' படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரையுலகினரும் அது குறித்து தெளிவாக சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றால் 'மாஸ்டர்' பட வியாபாரத் தொகையான 200 கோடி ரூபாயை வசூலிக்க கால தாமதம் ஆகும்.
தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தியேட்டர்களுக்கு முன்பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் 'மாஸ்டர்' பட வெளியீடு நிலை என்ன என்பது அரசின் 50 சதவீத அறிவிப்புக்குப் பிறகே தெரிய வரும் என்கிறார்கள்.