செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சினிமா பிரபலங்கள் பலரும் யூ டியூப் சேனல் துவங்கி வருகின்றனர். இயக்குனர் கே.பாக்யராஜும் கே.பி.ஆர் சோவ்ஸ் என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி உள்ளார். நேற்று தனது 70வது பிறந்த நாளை முன்னிட்டு இதனை அறிவித்தார். யூ டியூப் சேனலுக்கான தொழில்நுட்ப உதவிகளை லயோலா கல்லூரி விஷ்காம் மாணவர்கள் வழங்குகிறார்கள். மேலும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளத்திலும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பாக்யராஜ் கூறியிருப்பதாவது: சினிமாவை கண்டுபிடித்த லூமியர்ஸ் பிரதர் முதல் என்னை உங்கள் முன் நிற்க வைத்து என் குருநாதர் பாரதிஜாரா, என்னை வளர்ந்த ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய திரை, சின்னத்திரை எல்லாவற்றையும் கடந்து இப்போது மிகச் சின்ன திரைக்கு வந்திருக்கிறேன்.
யூ டியூப்பில் பேசுவதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் இருந்தாலும் இப்போது பத்து முதல் 12 நிமிடத்திற்குள் வீடியோவை முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதை செய்வேன். எல்லா காலத்திலும் என்னை ஆதரித்த ரசிகர்கள் இதிலும் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் பாக்யராஜ்.