செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகமாகி வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த் குமரன் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறார்.
ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் சித்தார்த். அச்சமில்லை, அச்சமில்லை உள்ளிட்ட பல ரியாலிடி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார். என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். ரெக்க கட்டி பறக்குது மனசு தொடரில் கதாநாயகனாக நடித்தார். தற்போது தேன்மொழி பிஏ தொடரில் ஜாக்குலினுடன் நடித்து வருகிறார்.
தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி சித்தார்த் குமரன் கூறியதாவது: சினிமாவில் நடிப்பது தான் எனது லட்சியம். அதற்கான பாதைதான் சின்னத்திரை. இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். படம் பற்றிய விபரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். விரைவில் வெளிவரும். என்கிறார் சித்தார்த் குமரன்.