ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் |
ஜெயம் ரவி, நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த பூமி படத்தை இயக்கியவர் லட்சுமண். இதற்கு முன் ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜுலியட், போகன்' ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக சொல்லப்பட்டது.
'பூமி' படத்தின் கதைக்கரு விவசாயத்தைப் பற்றியதாக இருந்தாலும், அதில் இடம் பெற்ற காட்சிகள் 'வாட்சப் பார்வேர்டு' மெசேஜ்களை வைத்து உருவாக்கப்பட்டவை என சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டது.
படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், “சுறா, ஆழ்வார், அஞ்சான், ராஜபாட்டை'' வரிசையில் நான் இதுவரை பார்த்த படங்களில் 'பூமி' மோசமான ஒரு படம். ஆரம்பம் முதல், கடைசி வரை எதுவுமே நடக்கவில்லை. இயக்குனர் லட்சுமணனுடன் பணிபுரிவதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஜெயம் ரவி,” என டுவிட்டரில் கமெண்ட் செய்துள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர், உங்களை இயக்குனர் தற்போது 'பிளாக்' செய்வார் என பதிலுக்கு கமெண்ட் செய்தார்.
அந்த ரசிகர்களுக்கு சேர்த்து இயக்குனர் லட்சுமண், “சார், இந்த படம் பண்ணணும், நம்ம அடுத்த ஜெனரேஷன் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன் புரோ. ரோமியோ ஜுலியட், எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா, நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் புரோ. நீங்க, சூப்பர் புரோ, நீங்க ஜெயிச்சிட்டீங்க, நான் தோத்துட்டேன்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர் லட்சுமணனின் இப்படிப்பட்ட பதிலுக்கு ரசிகர்கள் மேலும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். பொய்யான தகவல்களுடன் வாட்சப் பார்வேர்டு வச்சி இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு இந்த பேச்சு எதுக்கு,” என கிண்டலடித்து வருகிறார்கள்.