ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தெலுங்கு சினிமாவின் அதிரடி நடிகரான டாக்டர் ராஜசேகர், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டுவந்துவிட்ட அவர், புதிய படங்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் ராஜசேகர்.
கணவரின் உடல்நலத்தையும் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப்படத்தை அவரது மனைவி ஜீவிதாவே டைரக்ட் செய்ய இருக்கிறாராம். ஏற்கனவே ராஜசேகரை வைத்து சேஷு, சத்யமேவ ஜெயதே உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார் ஜீவிதா. அதேசமயம் இவை அனைத்து வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.