தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்து தன்னுடைய நடிப்பு எல்லையை விரிவாக்கி வருகிறார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அடுத்து தெலுங்கில் நேற்றுமுன்தினம் வெளியான 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு முன்னணி நடிகர்களுக்கு உண்டான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
முதல் நாளில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். நேற்று, இன்றும் விடுமுறை தினம் என்பதால் அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தப் படம் லாபத்தை நோக்கிச் சென்று விடும் என்கிறார்கள்.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வந்துள்ள மற்றொரு வாரிசான வைஷ்ணவ் தேஜ் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டதாக விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் குவியும் என்று தெரிவிக்கிறார்கள்.