துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்த பிறகுதான் 50 சதவீதத்தில் அனைத்துத் தியேட்டர்களும் நிரம்பின. அடுத்து இந்த மாதத்திலிருந்து தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் எந்தத் தியேட்டரிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்து ஹவுஸ்புல் போர்டு மாட்டப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக சில தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வடபழனியின் பிரபலமான தியேட்டரான கமலா தியேட்டர் இரண்டு தியேட்டர்களைக் கொண்டது. இரண்டு தியேட்டர்களுக்கும் சேர்த்து 1000 இருக்கைகள் நேற்று முழுவதுமாக நிரம்பியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
“1000 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுவிட்டன. ஹவுஸ்புல் போர்டு பார்க்க ஆனந்தக் கண்ணீர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.