மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். அதனால் மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“த்ரிஷ்யம் 2' படத்திற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பலரும் படத்தைப் பார்த்துள்ளது என நெகிழ வைத்துவிட்டது. பலர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், மெசேஜ் அனுப்புகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் சிறந்த படைப்புகளுக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு த்ரிஷ்யம் 2 படமும் ஒரு சான்றாகும்.
சினிமா ரசிகர்களின் இந்தத் தொடர்ச்சியான அன்பும், ஆதரவும் எங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும், தூண்டுகோலாக இருக்க வைக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மனமார்ந்த நன்றி. த்ரிஷ்யம் குழுவினருக்கு இது நிறைய அர்த்தத்தைக் கொடுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானதற்கு ஏற்கெனவே கேரள மாநில தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் மட்டும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் மிகப் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
சொந்தமாகத் தியேட்டர்களை வைத்திருக்கும் மோகன்லால் இப்படி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.