தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமாவில் சண்டை, மோதல் என்பது சிறிய அளவில் நடப்பது வழக்கம். அதற்கு முழு காரணமாக பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களது 'ஈகோ' தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் படத்தை இயக்கிய ஒரு இயக்குனரையே புறக்கணித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற படத்தை இயக்கியுள்ளவர் வெங்கட கிருஷ்ண ரோகந்த்.
இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், படத்தின் இயக்குனருக்குத் தெரியாமலேயே அந்த டீசரை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். மேலும், யூ டியுபில் வெளியாகும் டீசர், டிரைலர்களில் அந்த இயக்குனரின் பெயர் தலைப்பில் இடம் பெறுவது வழக்கம். அவரது பெயரைக் கூட அப்படி இடம் பெற வைக்காமல், மற்ற கலைஞர்கள் பெயருடன் சேர்த்தே இடம் பெற வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் அவரது முகப்புத்தகத்தில், “அன்பார்ந்த face book நண்பர்களுக்கு... மன்னிக்கவும்... இது வரை நான் இயக்கிய, விஜய் சேதுபதி நடித்த #யாதும்ஊரேயாவரும்கேளிர் #YaadhumOoreYaavarumKelir படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன்.
இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம், நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது. கூடவே மிக முக்கியாமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும்
நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மவுனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளருபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
தனது படத்தின் இயக்குனருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இயக்குனர்களை மதிக்கும் விஜய் சேதுபதிக்குத் தெரியுமா, தெரியாதா என்று திரையுலகத்தில் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தலையிடுவாரா என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.