நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்த 'டெடி' படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் குழந்தைகளும் ரசிக்கும் படமாக இருப்பதாலும், ஓடிடியில் வெளியானதாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
இப்படத்தில் ஒரு 'டெடி' பொம்மைதான் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நடக்கவும், பேசவும் செய்யும் அந்த பொம்மை கதாபாத்திரத்தில் கோகுல் என்பவர் தான் நடித்துள்ளார். ஆனால், பொம்மையின் தலை மட்டும் கிராபிக்ஸ் மூலம் வடிவமைத்து படத்தை எடுத்துள்ளார்கள்.
படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள் அந்த பொம்மையாக நடித்த கோகுலை மறக்காமல் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.
“காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான் மிஸ்டர் கோகுல், நாடக நடிகர். பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தியவர். தலை மட்டும் 3டி முறையில் 'பர்பாமன்ஸ் கேப்சர் டெக்னாலஜி' முறையில் படமாக்கப்பட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.