மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
தெலுங்கத் திரையுலகின் டாப் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக தெலுங்குத் திரையுலகில் நடித்து வருகிறார். எண்ணற்ற வசூல் சாதனைப் படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவியுடன் பல முன்னணி நடிகைகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். அப்படியும் சில நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.
தமிழ்த் திரையுலகில் அதிகம் கவனிக்கப்படாத திறமையான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. அவருடைய நடிப்புத் திறமைக்கு 'பிதாமகன்' படம் ஒன்றே போதும். அவரை தமிழ் சினிமா உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சங்கீதா தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்தப் பாடலை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து சங்கீதாவின் கணவர் பின்னணிப் பாடகர் கிரிஷ் மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் , “24 வருட கடின உழைப்பு, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் சங்கீதா, கடைசியாக தலைவர் சிரஞ்சீவி சாருடன் திரையைப் பகிர்ந்து கொண்டதற்கு, மணிசர்மா சாரின் அற்புதமான இசை, இயக்குனர் சிவா கொரட்டலாவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.