2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65வது படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. பூஜா ஹெக்டே ஹீரோயின், மனோஜ் பரமஹம்சா இசை. இந்த படத்தில் பிரபல டிக் டாக் பிரபல் அபர்ணா தாசும் நடிக்கிறார்.
விஜய் படத்தின் பூஜையில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு "மிகப்பேரிய படத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கப்போகிறேன். உலகின் வாழ்த்துக்கள் எனக்கு கிடைக்கட்டும்" என்று எழுதியிருக்கிறார்.
யார் இந்த அபர்ணா தாஸ்?
கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் எம்பிஏ முடித்து விட்டு மஸ்கட்டில் மார்க்கெட்டிங் துறையில் இருந்தார். டிக்டாக் பரப்பாக இருந்த காலத்தில் இவர் வெளியிட்ட டிக்டாக் வீடியோக்கள் வைரலாக பரவி புகழ்பெற்றார். இவரது டிக்டாக் வீடியோக்களை பார்த்த மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இவரை தனது படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வைத்தார்.
அதன் பின்பு மனோகரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை தர தற்போது விஜய் நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.