தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர், இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். சீக்கிரம் இதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார் அதர்வா.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மாதவன், அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.