மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தமிழில் எஸ்ஜே சூர்யா இயக்கி, நாயகனாக நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிலா என்கிற மீரா சோப்ரா. அதன்பின் 'மருதமலை, காளை, ஜகன்மோகினி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரத்திற்குள் அவருடைய உறவினர்கள் இருவரை அடுத்தடுத்து இழந்துவிட்டார். “மற்றுமொரு கசின் இன்று இறந்துவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் எனது குடும்பத்தில் இரண்டு உறவினர்கள் இறந்துவிட்டார்கள். இப்படி பயனில்லாத, உதவ முடியாத நிலையை பார்ப்பேன் என நினைக்கவில்லை. மனமும், உடலும் மரத்து போவதால் கோபம் கூட மறைந்துவிடுகிறது. இன்னும் எவ்வளவைப் பார்க்க வேண்டும்,” என பத்து நாட்களுக்கு முன்பு டுவீட் செய்துள்ளார்.
அதிலிருந்து தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உதவி செய்யும் விதத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார். நேற்று இன்னும் கோபமாக, “மருத்துவமனையில் பெட் கிடைக்காமலும், சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் கிடைக்காமலும், வாழ முடியாமல் இருக்க நான் எதற்காக 18 சதவீத ஜிஎஸ்டியைக் கட்ட வேண்டும், அதை நீக்குங்கள்,” எனப் பதிவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பாஜக ஆகியோரை டேக் செய்துள்ளார்.