ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் திரைப்படத் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பொருளாளர் தியாகராஜன் அனுப்பியுள்ள அறிக்கையின் சுருக்கம்: திரைத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சனையால் தற்போது 10 சதவீதம் மட்டுமே லாபம் பெறுகிறோம். ஆண்டுதோறும் சினிமா பற்றால் 70 சதவீதத்தினர் சினிமா நோக்கி வருகின்றனர். ஆனால் அவர்களில் 90 சதவீதத்தினர் தோல்வியையே சந்திக்கின்றனர்.
மூலதனத்தை மீட்பதில் கடினமாக உள்ள சூழலில், 2021-22 நிதியாண்டில் 194-ஜெ பிரிவின் கீழ், ஆதாய உரிமையில் 10 சதவீதம் வருமானவரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய உத்தரவிட்டுள்ளது பேரிடியாக உள்ளது. பலர் தோல்வியை சந்திப்பதால், வருமானவரி பிடித்தத்தை உரிமைகோரி எந்த பயனும் இல்லை. திரையுலகம் மீண்டெழும் வரை 10 சதவீதத்திற்கு பதில் 2 சதவீதம் மட்டுமே வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கோரியுள்ளார்.