ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
மிக மிக அவசரம் படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்சன் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கை: சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.
1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.
2. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் இயங்காததால், மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ தியேட்டர் உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டும்.
3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது தியேட்டர்களை திறக்க வேண்டும்.
4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.
5. திரைக்கு வர சிரமப்படும், ‛மிக மிக அவசரம்' போன்ற சமூக அக்கறை மிக்க படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.