தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும், சில டிவி படப்பிடிப்புகள் ரகசியமாக நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஜுன் 28ம் தேதிக்கான ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியார்கள்/கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். என, ஊரடங்கு தளர்வுகள் குறித்த செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் பழையபடி பரபரப்பாக ஆரம்பமாக உள்ளது. ஏற்கெனவே, ஐதராபாத்தில் சில படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இனி, சென்னையிலும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும்.
தமிழகத்தில் தொற்று முழுவதுமாகக் குறைந்த பிறகுதான் தியேட்டர்கள் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.