பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் |
தயாரிப்பாளர் கதிரேசனும், இயக்குனர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் படம் “அதிகாரம்”. இதை எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் கதிரேசன் இயக்கத்தில் 'ருத்ரன்' நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெறும். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கையில் கத்தி, உடலில் ரத்தம் என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது.