செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் நூறு மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்து சாதனை படைத்தன. வாத்தி கம்மிங் பாடலுக்கு மொழி, நாடுகளை கடந்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பாடலுக்கு நடிகைகள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் லட்சுமி மஞ்சுவுடன் அவரது மகள் வித்யா நிர்வானா மஞ்சுவும் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகையான லட்சுமி மஞ்சு, மணிரத்னம் இயக்கிய கடல், ஜோதிகா நடித்த காற்றின் மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.