பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தமிழ் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர் என இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் மணிரத்னம். கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தனது தனித்துவத்தையும் பெயரையும் இன்னமும் காப்பாற்றி வருகிறார்.
பொதுவாக ஒரு இயக்குனர் தனது படத்தை முடிப்பதற்குள் அதை பல முறை பார்த்துவிடுவார்கள். இருந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்களோடு அமர்ந்து பார்க்கும் போது தான் அந்தப் படத்தை இயக்கிய மொத்த சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியும்.
ஆனால், இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய படங்களை தியேட்டருக்குச் சென்று பார்த்து 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். தியேட்டர்களில் பார்க்கும் போது படத்தில் இருக்கும் தவறுகள் என்னவென்பது தெரிந்துவிடும், அதனால் தியேட்டர்களில் பார்ப்பதில்லை என அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தங்கள் படங்களில் இருக்கும் தவறுகளைப் பற்றிப் பேசத் தயங்கும் போது, இத்தனை வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் தன் படங்களில் தவறுகள் இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொல்வதே பெரிய விஷயம்தான்.
மணிரத்னம் தற்போது 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.