பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை. பிரமர் சென்னை வந்த போதும், இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என பல இடங்களில் இந்த வலிமை அப்டேட் எதிரொலித்தது. ஆனாலும், படக்குழுவினர் அப்டேட் கொடுக்காமல் இழுத்து வந்தனர். கடைசியாக மே 1 அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்றனர். கொரோனா பிரச்னையால் அதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் இன்று(ஜூலை 11) திடீர் இன்ப அதிர்ச்சியாக மாலை 6.05 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். யுவனின் மிரட்டலான பின்னணி இசையில் அஜித் வரும் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். வலிமை அப்டேட் மாலை வருகிறது என தகவல் வெளியானது முதலே சமூகவலைதளங்களை ஆக்கிமிரத்த ரசிகர்கள் அப்டேட் வந்த பின்னர் மேலும் கொண்டாடினார். டுவிட்டரில் #ValimaiMotionPoster, #ThalaAjith, #Hvinoth, #BoneyKapoor உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் ஹேப்பி போனி கபூர் அண்ணாச்சி!
வலிமை மோஷன் போஸ்டரை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=7PMx8LyD7dU