ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த நடிகை மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலினத்தவரை தவறாக சித்தரித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதையடுத்து விசிக.,வின் வன்னி அரசு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து மீரா மிதுன் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் மீரா மிதுனோ அதை ஏற்காமல், என்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்தநிலையில், தலைமறைவான மீராமிதுனை சைபர்கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று (ஆக.,14) கைது செய்தனர். அவரை கைது செய்யச் சென்றபோதும் போலீசாரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனை பெண் போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீரா மிதுன் கைது குறித்து அவரது சக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக நாங்கள் சகித்துக் கொண்டு வந்த அனைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களும் இனிமேல் முடிவுக்கு வந்து விடும் என்று பதிவிட்டுள்ளார்.